
பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பு போட்டியில் கோலாலம்பூர் தாமான் மெலாவாத்தி தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவன் சர்வேஸஷ்வரன் த/பெ யோகேஸ்வரன் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
342 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் சர்வேஸ்வரன் தனது திறமையை வெளிப்படுத்தி மூன்று பதக்கங்களை வென்று இருப்பது பாராட்டுக்குரியது. தமது வெற்றிக்கு பக்கபலமாக இருந்த தலைமை ஆசிரியை யசோதா, துணைத் தலைமையாசிரியர் விக்டர் ஆகியோருக்கு சர்வேஷ்வரன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.