
மலேசிய கால்பந்து சங்கம் நடத்திய நடுவர் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த பவித்திரா, முவரசி, தாரணி, தேன் பிரியா, மதுரா, இளவரசி, ரசித்திரா ஆகிய 7 இந்திய பெண்கள் முழுத் தேர்ச்சிப் பெற்று நடுவர்களாக உருவாகி உள்ளனர்.
மலேசிய வரலாற்றில் ஒரே நேரத்தில் 7 இந்திய பெண்கள் மலேசிய கால்பந்து துறையில் நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும் .
பினாங்கு மாநில இந்தியர் பெண்கள் கால்பந்து குழுவுக்கு விளையாடி வந்த இவர்கள் அனைவரும் இப்போது நடுவர்களாக முன்னேற்றம் கண்டுள்ளனர்.
எப்ஏஎம் நடத்தும் கால்பந்து போட்டியில் மூன்றாவது கிளாஸ் நடுவர்களாக இவர்கள் பணியாற்றுவார்கள்.
இதனிடையே, பினாங்கு மாநிலத்தை சேர்ந்த ஏழு இந்திய பெண்கள் நடுவர்களாக தேர்ச்சி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது என்று பினாங்கு இந்திய கால்பந்து சங்கத் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்



