
நாட்டில் பெய்த அடைமழையால் கோலாலம்பூர் காராக் செல்லும் நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடு திரும்ப முடியாமல் பல வாகனங்களில் மக்கள் சிக்கிக் கொண்டார்கள். சிக்கிக் கொண்ட 450 பேருக்கு உணவுகள் வழங்கப்பட்ட நிலையில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் சுத்தம் செய்யப்பட்ட பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. பல மணி நேரத்திற்கு பின்னர் இவர்கள் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



