33.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

தாமான் ஸ்ரீ முடாவில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட தாயாரையும் பச்சிளம் குழந்தையையும் காப்பாற்றிய சிலாங்கூர் மந்திரி புசாரின் மனிதநேயம்

🔥 Views : 6
👁 Reading Now : 56

சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் கிள்ளான் மற்றும் ஷா ஆலம் வட்டாரத்தில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதில் ஷா ஆலம் ஸ்ரீமுடா பல அடுக்குமாடி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டது மக்கள் வெளியேற முடியாமல் வழி தவித்தனர். இந்நிலையில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல 8 விரைவு படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்ற சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் களத்தில் இறங்கி உள்ளார். இந்திய குடும்ப மதுவையும் அவரின் பச்சிளம் குழந்தையும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உதவி புரிந்து காப்பாற்றும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் மனித நேயத்தை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles