
ஷா ஆலம் ஸ்ரீ மூடாவில் வெள்ளத்தில் சிக்கி பரிதவிக்கும் மக்கள் உணவுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை காப்பாற்றும் பணியில் சிலாங்கூர் மாநில அரசு படகுகளை பயன்படுத்தி வருகிறது. படகு ஓட்டுவதில் மிகவும் தேர்ச்சி பெற்றிருக்கும் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஓங் கியான் மிங் சொந்தமாக படகை ஓட்டி மக்களை காப்பாற்றிய வண்ணம் இருக்கிறார். நேற்று நான்கு மணி நேரம் படகு ஓட்டி 40 பேரை பத்திரமாக காப்பாற்றியுள்ளார். நேற்று முன்தினம் செராஸ் 11ஆவது மைலில் வெள்ளத்தில் சிக்கி கொன்றவர்களை காப்பாற்றிய இவர் இப்போது முழுநேரமாக ஸ்ரீமூடா மக்களுக்கு உதவி கொண்டிருக்கிறார்.



