
ஒமிக்ரோன் வைரஸ் அதி வேகமாக பரவும் தன்மையைக் கொண்டிருப்பதால் டெல்டா வைரஸை போன்று பாதிப்பை ஏற்படுத்தினால் நிலைமை மோசமாகிவிடும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸின் பரவல் மிகவும் கவலைத்தரும் வகையில் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்க விரும்புவதாக அவர் சொன்னார். நாம் கொரோனா பெருந்தொற்றின் மிகவும் மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம். உலகம் முழுவதும் ஒமிக்ரோன் பாதிப்பு அதிவேகமாக உயர்கிறது. எனக்கு நெருக்கமான நண்பர்கள் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் எனது விடுமுறை திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டேன் என்று அவர் சொன்னார்.
