
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஷா ஆலம் செக்சன் 25 தாமான் ஸ்ரீ மூடாவில் திறக்கப்பட்ட சுகாதார சிகிச்சை மையம், நாள் ஒன்றுக்கு 50 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். அவசரகால சிறப்பு மருத்துவர் மற்றும் 10 படுக்கைகள் ஆகியவற்றை இந்த சிகிச்சை மையம் கொண்டுள்ளது. .. இந்த சிகிச்சை மையம் ஒரு மினி அவசர அறை போல செயல் படுகிறது. சிறந்த சேவைக்கு இது எங்களுக்கு முக்கியமானது என்று வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட தாமன் ஸ்ரீ மூடாவிற்கு வருகை தந்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
