
வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பது இன்னும் முடக்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கூறினார். உள்நாட்டு தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் விரும்புகிறது.
வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை என்று பல துறையினர் கேட்டுக் கொண்டாலும் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
உள்நாட்டில் அதிகமான வேலை வாய்ப்புகள் இருப்பதால் இளைஞர்கள் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.



