
சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பட்டில் செல்கேர் அமைப்பு மக்களுக்கு இலவசமாக கோவில் 19 பரிசோதனைகளை மாநில மாநிலம் நடத்தி வருகிறது.
சிலாங்கூர் மாநில மக்கள் குறிப்பாக ஏழைகள் அவரவர் இருப்பிடங்களுக்கு அருகில், வாக்களிக்கும் சட்டமன்றத் தொகுதியில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00மணி வரை நடத்தப்படும் நோய் பரிசோதனையில் பங்குகொள்ள முடிகிறது.
வரும் மே 24 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பெட்டாலிங் ஜெயா மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் இலவச மருத்துவ பரிசோதனை நடைபெறும்.
இட நெருக்கடியையும் ஏமாற்றத்தையும் தவிர்க்கச் செலங்கா செயலி வாயிலாகவும் http://screening.selangkah.my எனும் அகப்பக்கத்தின் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
.நமக்கு நாமே உதவிக்கொள்ளும் வகையில் உங்கள் பகுதியில் நடக்கும் இலவச நோய் பரிசோதனை முகாம் குறித்த தகவல்களை உங்கள் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள எம் சிலாங்கூர் மாநில அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது..



