28.5 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

வெள்ளத்தில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் கால்வாய்களை சுத்தம் செய்தார் சாமிநாதன்

🔥 Views : 9
👁 Reading Now : 67

நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஜெலுபு தித்தி என்ற இடமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தித்தி கிராமமும் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் பல வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலாக்கா மாநில காடேக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி சாமிநாதன் தலைமையில் நேற்று தித்தி இடத்தில் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கோள்ளப்பட்டது. மாண்புமிகு சாமிநாதன் கால்வாயில் இறங்கி சேரும் சக்தியும் அகற்றும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தித்தி கிராம மக்களின் வீடுகளை சுத்தம் செய்யவும் அவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி கொடுக்க பொதுமக்கள் முன் வரும்படி மாண்புமிகு சாமிநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles