
கெடா மாநிலத்தில் கூலிம் கெராங்கான் வட்டார மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கூலிம் வட்டார மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையா தடுப்பூசி போடும் பணிகளை நேரில் பார்வையிட்டு முன்கள பணியாளர்களை பாராட்டினார்.
