
வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்கள் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்ப பாரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் எழுச்சிமிகு திட்டத்தின் கீழ் உடனடியாக உதவித் தொகை வழங்குவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் தற்காலிக நிவாரண மையங்களிடமிருந்து பெறப்படும். இன்று முதல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆயிரம் வெள்ளி உதவித்தொகை வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
