26.4 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாக்கி விடுமுறையில் செல்லட்டும்!

🔥 Views : 7
👁 Reading Now : 38

எஸ்.பி.ஆர்.எம். தலைவராக பதவி வகிக்கும் அஸாம் ஜக்கி பங்கு பரிவர்த்தனையில் இடம் பெற்றிருக்கும் ஒரு நிறுவனத்தில கிட்டத்தட்ட 20 லட்சம் பங்குகள் வைத்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் மீது விசாரணை நடத்தும்படி தாம் ஆலோசனைக் குழுவிற்கு எழுதியிருந்த கடிதம் தொடர்பில் விசாரணை நடத்தப்படாததால் ஊழல் தடுப்பு ஆலோசனை குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக டாக்டர் எட்மெண்ட் நேற்று அறிவித்தார். அஸாம் பாக்கி விடுமுறையில் செல்ல வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ள பெர்ஜூவாங் கட்சி இந்த குற்றச்சாட்டை உடனடியாக விசாரணை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி,மக்களவைக் கூட்டத்தொடரில் சுங்கைப் பூலோ நாடாளுமன்ற உறுப்பினரான சிவராசா, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலான பங்குகளை வைத்திருப்பதால் மக்களவையில் விவாதிக்கப்பட வேண்டுமெனக் கோரும் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles