25.8 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 4 அமைப்புகளின் உதவிப் பொருட்கள் !

🔥 Views : 9
👁 Reading Now : 27

ஷா ஆலம் தாமான் ஸ்ரீ முடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 4 அரசு சாரா அமைப்புகள் உதவிப் பொருட்களை வழங்கியுள்ளன. சிலாங்கூரின் பத்து 8, ஶ்ரீ மூடா, மேரு ஆகியப் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை Rotary of Bukit Bintang Mageswari Nadarajan, Persatuan Kebajikan Suara Rakyat Selangor (SRS) Mr. Paramasivan, Pertubuhan 99 Kebajikan Insan Selangor, Pertubuhan Pusat Pemulihan Dalam Komuniti Bandar Botanic ஆகிய அமைப்புகள் இணைந்து வழங்கியுள்ளன. பொது மக்களிடம் இருந்து உதவிப் பொருட்கள் திரட்டப்பட்டதோடு 4 இயக்கங்களின் தனிப்பட்ட பங்களிப்பும் இருப்பதாக புக்கிட் பிந்தாங் ரோட்டரி கிளப் அமைப்பின் சமூக சேவைப் பிரிவின் இயக்குநர் மகேஸ் தெரிவித்தார். ஶ்ரீ மூடாவில் ஒரு கிடங்கில் பொருட்கள் திரட்டப்பட்டு பின்னர் 3 பகுதிகளாப் பிரித்து அவற்றை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்தளித்தாக மகேஸ் குறிப்பிட்டார். புக்கிட் பிந்தாங் ரோட்டரி கிளப் ஆலோசகர் டத்தோ ரிக் லோ எங்களுக்கு முன்னோடியாக இருந்து உதவிகள் வழங்கி வருகிறார் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles