25.8 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

எம்ஏசிசி தலைவர் அஸாம் பாக்கியை விராசணை செய்ய அமைச்சரவை உத்தரவிடவேண்டும்!

🔥 Views : 7
👁 Reading Now : 43

எம்ஏசிசி எனப்படும் மலேசிய லஞ்ச தடுப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாக்கி ஒரு நிறுவனத்தில் இருபது லட்சம் பங்குகள் வைத்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து எம்ஏசிசி மேல் நடவடிக்கை எடுக்கத் தவறியதால், அவ்விவகாரத்தை விசாரணை செய்யும்படி அமைச்சரவை உத்தரவிட வேண்டும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா கேட்டுக் கொண்டுள்ளார். எம்ஏசிசி விசாரணை ஆலோசனைக் குழுவுக்கு அமைச்சரவை உத்தரவிட வேண்டுமென என்று அவர் இன்று ஆணித்தரமாக வலியுறுத்தினார். அஸாம் பக்கி மீது கூறப்பட்டுள்ள அந்த கடுமையான குற்றச்சாட்டை எம்ஏசிசி கீழ் இயங்கும் 5 கண்காணிப்புக் குழுகளில் ஒன்றான ஆலோசனை குழுவுக்கு அமைச்சரவை உத்தரவிட வேண்டும். எம்ஏசிசி யின் நேர்மைக்கு குந்தகம் விளையக் கூடாதென்பதால் அமைச்சரவை அந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றார் அவர். எம்ஏசிசியை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles