
அங்காசாபுரி(கோலாலம்பூர், ஜன.02: மின்னல் பண்பலை வானொலி ஏற்பாட்டில் வெள்ள நிவாரணம் கருதி ‘DRIVE THRU TRUCK’ என்னும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட சமூக உதவித் திட்டத்திற்கு ஏராளமான நேயர்கள் தங்களின் உதவிக் கரங்களை நீட்டியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு சார்பில் அ.நளினி தெரிவித்தார். இன்று காலை பத்து மணிக்கு தொடங்குவதாக இருந்த இந்த நிகழ்ச்சியின்வழி உதவுவதற்காக காலை 8:30 மணிக்கெல்லாம் நேயர்கள் உதவிப் பொருட்களுடன் அங்காசாபுரி நுழைவாயிலில் திரண்டதால் மின்னல் படையைச் சேர்ந்தவர்கள் திக்குமுக்காடினர். கட்டில், மெத்தை, தலையணை, ரொட்டி டின்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், புதிய ஆடைகள் என ஏராளமாக திரண்ட பொருட்களுடன் ஸ்ரீ மூடாவை நோக்கி புறப்பட இருப்பதாகவும் நளினி தெரிவித்தார்.



