31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

மக்களைப் பற்றி அக்கறைப்படாத நிதி அமைச்சர்: புவாட் சர்க்காசி காட்டம்

🔥 Views : 6
👁 Reading Now : 48

மக்கள் அடுத்தடுத்து துயரத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் வேளையில் மக்களைப் பற்றி அக்கறைப் படாத நிதி அமைச்சரை நாடு கொண்டிருப்பது துரதிர்ஷ்டமானது என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்க்காசி தெரிவித்துள்ளார். அண்மைய வெள்ளப் பேரிடரால் மட்டும் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கவில்லை. தேசியக் கூட்டணி அரசு, அரைகுறையான ஏற்பாட்டுடன் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நடைமுறைப்படுத்த ஆரம்பித்த காலத்தில் இருந்தே மக்கள் பல்வேறு பொருளாதார பின்னடைவையும் அதனால் வாழ்க்கைச் சிக்கலையும் எதிர்கொண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் ஊழியர் நல நிதியில் இருந்து பொதுமக்கள் தங்களின் கணக்கில் இருக்கும் பணத்தை மீட்க நிதி அமைச்சர் தெங்கு ஸப்ருள் அசீஸ் தடை விதித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சர்க்காசி மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles