25.3 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

தைப்பூசத் திருவிழா கொண்டாட்டத்தை மறுபரிசீலனை செய்க -பொன். வேதமூர்த்தி வேண்டுகோள்

🔥 Views : 15
👁 Reading Now : 59

கோவிட் -19 நுண்கிருமியின் புதிய வடிவமான ஓமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு நாட்டிலுள்ள இந்துக்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்டாவைவிட ஓமிக்ரான் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாக இருந்தாலும், அது தடுப்பூசிக்கு குறைந்த அளவிலேயேக் கட்டுப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெறும் 30 நாட்களில் 3,65,000 பேருக்கு ஒமிக்ரோன் கிருமி பரவி உள்ளது.

மலேசியர்களாகிய நாம், ஏற்கெனவே அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், பத்துமலை, பினாங்கு, சுங்கைப் பட்டாணி, ஈப்போ, ஜோகூர் தைப்பூச விழாக்களில் இலட்சக் கணக்கானோர் சமூக இடைவெளி இன்றி கூடும்பொழுது பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் அனைத்துத் தரப்பினரும் இவ்வாண்டு தைப்பூச கொண்டாட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி தலைவருமான பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles