
ஒரு கை மட்டும் உடைய ஒரு பெண் உடல் கட்டழகுப் போட்டியில் கலந்து வெற்றியும் பெற்று, உலக அளவில் சாதனை நாயகியாக உயர்ந்துள்ளார். 2018-இல் ஒரு சாலை விபத்தில் ஒரு கையை இழந்தபோது 27 வயதை எட்டியிருந்த ஒரு பெண்; சிகை அலங்கார தொழிலை மேற்கொண்டிருந்தார்; இரு மாதங்கள் படுக்கையிலேயே இருந்த கிம் நா யூன் என்னும் அந்த இளநங்கை, ‘ஸ்கொலியூசஸ்’ என்னும் தண்டுவட வளைவு நோய்க்கும் உள்ளானார். சிகிச்சைக்கும் பயிற்சிக்கும் ஒரு மறுவாழ்வு மையத்திற்கு சென்றுவந்த நாட்களில், அங்கு சக்கர நாற்காலிகளில் இருந்தவர்களைக் காட்டிலும் தான் எவ்வளவோ மேல் என்று தனக்குத் தானே ஊக்கம் பெற்று இப்பொழுது பெண்களுக்கான உடல் கட்டழகுப் போட்டியில் கலந்து, இரு கைகள் உள்ளவர்களை யெல்லாம் வென்று ஒரு கைக்கார சாதனைப் பெண்ணகத் திகழ்கிறார்.
