29.6 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

பேரரசர் – பிரதமறுக்கு அவமதிப்பு: கணேஸ்வரன் நடராஜாவுக்கு போலீஸ் வலைவீச்சு!

🔥 Views : 8
👁 Reading Now : 21

மாமன்னரையும் பிரதமரையும் அவமதிப்பு செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பெயரில் கணேஸ்வரன் நடராஜா என்பவர்மீது கோலாலம்பூர், செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் தொடர்பில் கடந்த டிசம்பர் 20-ஆம் நாள் நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்த கணேஸ்வரன் அவ்வாறு செய்யத் தவறிவிட்டார். தவிர, அவரின் சார்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக அவர்மீது மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால், அவரைத் தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவரைப் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படியும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles