
தடுப்புக் காவல் கைதிகள் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த உள்துறை அமைச்சு ஒரு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கோரிக்கை வைத்தனர். தடுப்புக்காவலில் இந்தியர்கள் உட்பட பலரும் மரணம் அடைந்து வருகிறார்கள்.
இந்த மரணம் தொடர்பில் ஒளிவுமறைவின்றி விவசாணை நடத்தப்பட வேண்டும்.
அந்த வகையில் சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை உள்துறை அமைச்சு அமைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு காவல் கைதி சிவபாலன் மரணமடைந்தார்.
இவரின் இல்லத்துக்கு சென்ற சொந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம்ஸ், டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் சாரி ஆகியோர் தங்களது இறுதி அஞ்சலி செலுத்தி இந்த கோரிக்கையை முன் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.