
இங்கு கோல செபெத்தாங் போய் எங் சீனப்பள்ளி அருகிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து ஆடவரின் சடலமொன்றை போலீசார் மீட்டனர்.பொதுமக்கள் வழங்கிய தகவலைத் தொடர்ந்து காலை 8 .30 மணியளவில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த போலீசார்,தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டதாக தைப்பிங் மாவட்டப் போலீஸ் தலைவர் துணை கமிஷினர் ஒஸ்மான் மாமாட் கூறினார்.
சடலத்தின் மீது எந்தவொரு குற்ற அம்சங்களும் இல்லையென தெரிவித்த அவர்,சவப்பரிசோதனைக்காக சடலம் தைப்பிங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக மேலும் சொன்னார்