
ஆசியா-பசிபிக் ரீதியில் நடைபெற்ற ஒலிம்பியாட் பசுமைப் புரட்சி புத்தாக்க போட்டியில் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
3 மாதங்கள் நடைபெற்ற இந்த பசுமைப் புரட்சி புத்தக போட்டியில் பல நாடுகள் பங்கேற்ற வேலையில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி சேர்ந்த மாணவர்கள் எஸ். அம்புஜா, மேதனேஷ் மற்றும் தனியாமித்ரன் ஆகியோர் நீர் சுத்திகரிப்பு பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.