
பினாங்கு மாநிலத்தின் தென் செபராங் பிறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்தின் நிர்மாணிப்புப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு மேம்பாட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர் டத்தோ கே.அன்பழகன் தெரிவித்தார்.
கடந்த 2005 -ஆம் ஆண்டு வாக்கில் அன்றைய தேசிய முன்னணி அரசாங்கம் 4 ஏக்கர் நிலத்தையும்,35 லட்சம் வெள்ளி மாநிலத்தையும் வழங்கியது.
அதன் பிறகு அதன் அடிப்படை வேளைகளில் சுணக்கம் ஏற்பட்டு நிர்மாணிப்புப் பணிகள் நடைபெறாமல் இருந்து வந்தது.அதன் பிறகு பள்ளியில் மேலாளர் வாரியத் தலைவராக மோகன் சின்னையா பொறுப்பேற்றப் பின்னர்,கட்டுமானத்திற்கான அனைத்து அடைப்படை வேலைகளும் முடிக்கப்பட்டு,இன்று பள்ளி கட்டட நிர்மாணிப்புப் பணிகள் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக அவர் சொன்னார்.
எதிர்வரும் 5.4.2024 -இல்,புதியப் பள்ளி கட்டி முடிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 10 ஆண்டுகால போராட்டத்தில் கிடைக்கப் பெற்ற வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
