
கணபதி என்பவர் காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்டு மரணமடைந்தார் என்கின்ற குற்றச்சாட்டு நம் மனதைவிட்டு மறையும் முன்னரே இன்னொரு மரணச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
42 வயது நிரம்பிய சிவபாலன் சுப்ரமணியம் என்னும் ஒரு பாதுகாவலர் கோம்பாக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு சில மணி நேரத்திற்குள் இறந்துவிட்டர். என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சிவபாலன் மரணமுற்றதாகக் போலீசாரல் கூறப்படும் நேரமும் ,பின்பு அவரின் மரண நேரத்தை அவரின் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்திய நேரமும் வேறுபடுவதால் இந்த உடனடி விசாரணை அவசியமாகிறது.
மேலும் ஒரு செய்தி அவர் காவல் நிலையத்தில் இறந்தார் என்றும் மற்றொன்று அவர் செலாயாங் மருத்துவ மனையில் இறந்தார் என்றும் கூறுகிறது
இது உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் திறந்த விசாரணை தேவை என்று குலசேகரன் வலியுறுத்தினார்.