
நாட்டில் கோவிட் 19 நோய்த்தொற்று அதிகரித்துக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் இரண்டு வாரம் வீட்டில் இருக்கும்படி சுகாதார
அமைச்சு கேட்டுக்கொண்டிருக்கிறது.
நோய்த்தொற்று மிக மோசமாக பரவி கொண்டிருப்பதால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இரண்டு வாரம் வீட்டில் இருக்கும்படி சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ நோர் இஷாம் அப்துல்லா கேட்டுக்கொண்டார்.
பொதுமக்கள் இரண்டு வாரம் வீட்டில் இருந்தால் நாட்டில் நோய்த்தொற்று எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறையும் என்று அவர் சொன்னார்.