33.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

அஸாம் பாக்கி பங்குகள் விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

🔥 Views : 11
👁 Reading Now : 61

மலேசிய ஊழல் தடுப்பூ ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி நிறுவனப் பங்குகளை வைத்திருந்த விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று பக்கத்தான் ஹராப்பான் தலைவர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மௌனம் சாதிக்க க்கூடாது. ,அந்த ஊழல் தடுப்பு அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையிலான சம்பவங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்பது குறித்து விளக்கப்பட வேண்டும் என்று கோரியது. அந்நிய நாடுகளுக்கான உளவு அமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநர் டத்தோ ஹஸ்னா அப்துல் ஹிமிட்டுக்கு சொந்தமான இரண்டரை கோடி வெள்ளி களவு போன சம்பவத்தில் எம்.ஏ.சி.சி. அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு உள்ளிட்ட விவகாரங்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles