
இலங்கையின் ஏழ்மையைப் பயன்படுத்தி அதை கடனாளி நாடாக ஆக்கியுள்ள சீனாவின் இலங்கைத் தூதரகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சீன மொழியிலேயே நடைபெறுகின்றன. இந்தியாவும் தன் பங்கிற்கு அங்குள்ள பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளில் இந்தி மொழியைக் கற்றுக்கொடுக்க முனைந்துள்ளது. இதன் மறைபொருள் இலங்கை மண்ணில் தமிழ் மொழிப் பயன்பாட்டை சிதைக்க வேண்டும் என்பதுதான். ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அந்த இனத்தின் மொழியைச் சிதைக்க வேண்டும் என்ற சிந்தாந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் பெரும்பான்மை மொழியான சிங்களத்திற்கு அடுத்த இடத்தில் உள்ள தமிழை ஒடுக்குவதற்காக இலங்கை அரசு இப்படி மறைமுகமாக தமிழ் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோ என்ற அவதானம் எழுகிறது.
