
இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என்பதைத்தான் தேர்தல் ஆணையத்தின் சுறுசுறுப்பும் வேகமும் காட்டுகின்றன. வரும் 16-ஆம் நாளில் புதிய வாக்காளர் பட்டியலை அது அறிவிக்க இருப்பதும் அதில் ஒரு கூறாக பார்க்கப்படுகிறது. 18-வயதை எட்டிய புதிய வாக்காளர்கள் 12 லட்சம் பேரும் இந்தப் புதிய பட்டியலில் இடம்பெற்றிருப்பார்கள் என்று தெரிகிறது. மொத்த வாக்காளர் எண்ணிக்கை 21.1 மில்லியன் பேர் என்று ஆணையத்தின் துணைத் தலைவர் அஸ்மி ஷாரோம் தெரிவித்தார்.
