
பத்து மலை அருள்மிகு முருகன் திருக்கோயிலில் தைப்பூச நேர்த்திக்கடன் தொடர்பில் காவடிகளுக்கு தடைவித்திக்கப்பட்டுள்ளதாக கோலாலாம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசத் திருவிழா தொடர்பில் தேசிய பாதுகாப்பு மன்றம் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிவிக்கும்வரை இந்தத் தடை நீடிக்கும் என்று இதன் தொடர்பில் ஊடகத்தினருக்கு தகவல் தெரிவித்தபோது தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா அறிவித்தார். அதைப்போல ரத ஊர்வலத்தில் 1,000 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் ரத அணிவகுப்பைக் காண அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் அதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்றும் நடராஜா கூறினார்.
