
நாட்டில் மருத்துவத் துறைக்குத் தேவையான ஆக்சிஜன் கையிருப்பு தற்போதைக்கு போதுமான அளவு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா தெரிவித்தார்.
உடனடித் தேவைக்குப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக 20,000 மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளதோடு நடப்பு தேவையை விட ஐந்து மடங்கு அதிகமான திரவமய ஆக்சிஜனை விநியோகிக்கும் ஆற்றலை விநியோகிப்பாளர்கள் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்ப்பரவல் திடீரென அதிகரித்த காரணத்தால் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை அபரிமிதமாக அதிகரித்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.



