27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

இளைஞர் நவீன் மரண விசாரணையில் உண்மையும் நீதியும்
வெளிக்கொணரப்பட வேண்டும்

🔥 Views : 8
👁 Reading Now : 70

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் சிலரால் பலவந்தமாக சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்த இந்திய இளைஞர் நவீன் திருமாறன் நீதிமன்ற விசாரணையில் உண்மை வெளிப்பட வேண்டுமெனக்கோரி நேற்று
ஜோர்ஜ்டவுன் தீமோர் லாவுட் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்யப்பட்டது.தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சம்பவத்தின் நீதிமன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபர்களை கொண்டு வந்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென இளைஞர் நவீன் திருமாறன் வழக்கின் கண்காணிப்புக் குழுவின் தலைவர் அருண் துரைசாமி தலைமையில் நான்கு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டது.இந்த நீதிமன்ற வழக்கை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் வாயிலாக சுயேச்சை விசாரணையும் மேற்கொண்டுள்ளோம்.அதன் மூலமாக கிடைத்துள்ள பல புதிய ஆதாரங்களையும் பினாங்கு மாநில போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles