
காவல் கைதி மரணங்க அக்ரில் சாரி தொடர்பில் போலீஸ் படைத் தலைவர் விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார் கடந்த மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்ட கணபதி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இப்போது சிவபாலன் என்பவர் மரணம் அடைந்துள்ளார். அண்மைகாலமாக தடுப்புக்காவல் கைதிகள் மரணம் அடையும் சம்பவம் கவலை அளிக்கிறது. ஆகவே மலேசியா போலீஸ் படைத் தலைவர் அக்ரில் சாரி விரைவில் பொது விசாரணை நடத்த வேண்டும் என அன்வர் கேட்டுக்கொண்டார்.



