34 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே பால்குடம் எடுக்க அனுமதி

🔥 Views : 9
👁 Reading Now : 47

தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தடுப்பூசி போட்டுக் கொண்ட பக்தர்கள் மட்டுமே பால்குடங்கள் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா தெரிவித்தார். ஜனவரி 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பத்துமலை தைப்பூசத்தில் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது ஒரு முறை 500 பக்தர்களுக்கு அனுமதி. 12 முறை அடிப்படையில் 6,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப் படும் என்று அவர் சொன்னார். ஜனவரி 18 ஆம் தேதி தைப்பூசம் என்பதால் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 18 முறை நடைபெறும் சிறப்பு பூஜைமில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றார். காவடிகள் எடுப்பதற்கு அனுமதி இல்லை. அதேசமயம் பால்குடங்கள் எடுப்பவர்கள் முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles