33.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

தைப்பூசத் திருவிழா ஆலயங்களில் அனுமதிக்கப்படும் பக்தர் எண்ணிக்கை

🔥 Views : 6
👁 Reading Now : 62

பத்துமலை அருள்மிகு திருமுருகன் ஆலயத்தில் ஜனவரி 16 முதல் 19-ஆம் நாள் வரை காலை 5:00 முதல் மாலை 5:00 மணிவரை 12 தடவை இடம்பெறும் தரிசனத்திற்கு ஒவ்வொரு முறையும் 500 பக்தர்கள் அனுமதிக்கப்படும் வேளையில் ஒரு நாளில் அதிகபட்சம் 6,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. தைப்பூச தினத்தன்று 18 முறை இடம்பெறும் தரிசனத்திற்கு 9,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 30 நிமிட தரிசனத்திற்குப் பின் 30 நிமிடங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 இடங்களில் நிற்கும் இரத ஊர்வலத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை; பினாங்கு ஜோர்ஜ்டவுன், அருள்மிகு பாலதண்டாயுதபானி கோயில், பினாங்கு ஜோர்ஜ்டவுன் நகரத்தார் தண்டாயுதபானி கோயில், ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா (ஈப்போ கல்லுமலைக் கோயில்), கெடா சுங்கை பட்டாணி அருள்மிகு சுப்ரமணியர் தேவஸ்தான பரிபாலன சபா ஆகிய தலங்களில் ஜனவரி 16 முதல் 19-ஆம் நாள்வரை நாள் ஒன்றுக்கு 3,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles