33.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

தேசிய கால் பந்து சங்க முன்னாள் விளையாட்டாளர் செர்பகத் சிங் காலமானார்!

🔥 Views : 7
👁 Reading Now : 62

தேசிய கால் பந்து சங்க முன்னாள் விளையாட்டாளர் செர்பகத் சிங், நேற்று மாலை ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் மிதிவண்டி பயிற்சியில் ஈடுபட்டிக் கொண்டிருந்தபொழுது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார். கால் பந்து வட்டத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் செர் பி என அழைக்கப்பட்ட இவர், தொடக்கத்தில் ஜோகூர் மாநில கால் பந்து குழுவில் இணைந்திருந்தார். பின்னர் 1983-இல் கோலாலம்பூர் குழுவில் சேர்ந்து விளையாடினார். தொடர்ந்து பகாங், நெகிரி செம்பிலான் மாநிலக் குழுக்களில் பங்கெடுத்த பின் பேராக் குழுவில் இணைந்தைருந்த நிலையில் 1996-இல் ஓய்வு பெற்றார். கால் பந்து பயிற்சியாளராகவும் நிகழ்ச்சி நெறியாளராகவும் செயல்பட்ட செர்பகத் சிங்கின் பெயர் மலேசிய காற்பந்து உலகில் என்றும் நிலைத்திருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles