26.4 C
Kuala Lumpur
Tuesday, August 4, 2026

Vetri

கோலாலம்பூர் விமான நிலையத்தில் கட்டாய தனிமைப் படுத்துதல் இல்லை!

🔥 Views : 28
👁 Reading Now : 26

கோவிட் தடுப்பூசி பெறுதலை நிறைவு செய்தவர்கள் அல்லது ஏற்கெனவே அத்தொற்றுக்கு ஆளான பயணிகள் இனி மலேசியாவிற்கு வந்தவுடன் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு ஆட்பட வேண்டியதில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இருப்பினும் பன்னாட்டு நுழைவாயிலில் ஆர்டிஜே சோதனையை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் அல்லது அதனை முழுமையாகப் பெறாத பயணிகள் மட்டும் குறிப்பிட்ட தனிமை மையங்களில் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். மலேசியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அதற்கான ஆதார கடிதத்தை மருத்துவரிடம் இருந்து பெற்றிருப்பதுடன் 11 முதல் 60 நாட்களுக்குள் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை பெற்றதற்கான சான்றையும் அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று கைரி தெளிவுபடுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles