26.4 C
Kuala Lumpur
Tuesday, August 4, 2026

Vetri

கோவிட்-19 போலி சான்றிதழ் விவகாரம்! அரச மலேசிய காவல் படை திவிர கண்காணிப்பு

🔥 Views : 19
👁 Reading Now : 62

நாடு முழுவதும் போலி தடுப்பூசி சான்றிதழை விற்பனை செய்பவர்களைக் கண்டறியவும் இதன் தொடர்பில் திவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும் அரச மலேசிய காவல் படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை திரங்கானுவில் ஒரு சம்பவம் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய காவல் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களிலும் இந்தக் குற்றம் நடைபெற்றிருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளதால், நாடு முழுவதிலும் கண்காணிப்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே திரங்கானு மாரானில் தடுப்பூசி பெறாமலேயே அதற்கான சான்றிதழைப் பெற்றதாக சாட்சியமளிக்க ஐந்து பேர் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles