31 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் பொங்கல் – தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து

🔥 Views : 7
👁 Reading Now : 66

அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்தையும் 2053 திருவள்ளுவர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்வதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் தெரிவித்துள்ளார். மக்கள் சிரமமான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் பிறக்கும் தைப் புத்தாண்டு வளமான வாழ்வையும் நலமான எதிர்காலத்தையும் கொண்டு வரட்டும். வெள்ளப் பேரிடரில் இருந்து மக்கள் மீண்டாலும் அதன் பாதிப்பில் இருந்து மீள சற்று காலமாகும். மறுபக்கம் கொரோனா அச்சம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் மக்கள் விவேகத்தை துணை கொண்டு எதிர்கால வாழ்வை நன்கு திட்டமிட்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர தமிழ்ப் புத்தாண்டு வழி காணட்டும். அனைவருக்கும் மீண்டும் பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்வதாக சிலாங்கூர் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகரும் பிகேஆர் கோத்தா ராஜா தொகுதி பொறுப்பாளருமான குணராஜ் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles