
பால்மரத்துக்குப் பின்னால் பால் மரம்தான் சீவுகிறார்களா அல்லது வேறு என்ன செய்கிறார்கள் என்று யாருக்குத் தெரியும் என்று அந்நாளைய மூலத் தொழில் அமைச்சர் லிம் கெங் எய்க் காலாடித் தனமாகக் கேட்டார். ஆனாலும் பெருவாஸ் தொகுதியில் அவர் ஏற்பாடு செய்த கறி விருந்தில் அதிகமான தோட்டப் பாட்டாளிகள் கலந்து கொண்டனர். இப்போது அதுவல்ல சிக்கல்; நாட்டில் எல்லாமும் கதவுக்குப் பின்னால்தான் நடைபெறுகிறது. வெளிப்படைத்தன்மை இல்லை; தைப்பூச அறிவிப்புகள் ஆகட்டும்; வெளிநாட்டுத் தொழிலாளர் தருவிப்பாகட்டும்; அவசர காலச் சட்டத்தை மீட்டுக் கொள்வதாகட்டும்; நாட்டில் சகலமும் இப்படித்தான்.



