
பெனம்பாங்கில் பரிதாபம்! பெனம்பாங், கம்போங் கொய்டுப்பான், ஜாலான் மோகோனிபோங்கில் இருந்த 28 வீடுகளை தீ சாம்பலாக்கியதால், அவ்வீடுகளில் வசித்த 174 பேர் தங்களின் வசிப்பிடத்தை இழந்து வீதிக்கு வந்துள்ளனர். ஜனவரி 19 பிற்பகலில் நடைபெற்ற இந்த விபத்தில் உயிர், உடல் சேதம் ஏற்படாதது நல்வாய்ப்புதான் எனினும் பொருட்சேதம் 100% ஏற்பட்டிருப்பது பெரும் சோகம்.
