
மலேசியாவில் தடுப்புக்காவலில் மரணமடையும் காவல் கைதிகள் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த சுயேட்சை விசாரணை குழு தேவை என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் கேட்டுக் கொண்டார்.
ஒரு மாதத்துக்கு முன்னர் கணபதி என்பவர்
மரணமடைந்தார். இப்போது சிவபாலன் மரணம் அடைந்துள்ளார்.
சிவபாலன் மரணம் தொடர்பில் கூறுப்படும் விளக்கத்தில் நிறைய முரண்பாடுகள் உள்ளன.
ஆகவே போலீசாரின் தவறான நடத்தை குறித்து விசாரணை மேற்கொள்ள சுயேச்சை விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.



