
மலேசியாவின் மக்கள் தொகை, 2020 குடியிருப்பு கணக்கெடுப்பின்படி 32.4 மில்லியன் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மலேசிய மக்கள் தொகையின் கூட்டு வளர்ச்சி 1.7 விழுக்காட்டு அளவிற்கு உயர்ந்துள்ளது. 32.4 மில்லியன் பேரில், 29.8 மில்லியன் அல்லது 91.7 விழுக்காட்டினர் மலேசியர் ஆவர்; 2.7 மில்லியன் அல்லது 8.3 விழுக்காட்டினர் முடியுரிமை இல்லாதவர்கள் என்று அவர் தெரிவித்தார். பூமி புத்ராக்கள் 69.4விழுக்காடு, சீனர்கள் 23.2 விழுக்காடு, இந்தியர்கள் 6.7 விழுக்காடு, மற்றவர்கள்0.7 விழுக்காடு என்ற அளவில் இருக்கும் மலேசிய மக்கள் தொகையில் ஆண்- பெண் பிறப்பு விகிதம் சராசரியாக 110 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற விகித்தத்தில் இருப்பதாகவும் இதில் ஆண்கள் 52.3 விழுக்காட்டினர் என்றும் பெண்கள் 47.7 விழுக்காட்டினர் என்றும் பிரதமர் வெளியிட்ட மக்கள் தொகை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
