
பிறந்த குழந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற 15 வயது அபலைத் தாய்க்கு கெமாமான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று பிணைவழங்க மறுத்துள்ளது. சம்பந்தப்பட்ட சிறுமிக்கு எதிராக பீனல் கோடு 302-இன் கீழ் சுமத்தத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டு நீதிபதி தெங்கு எலியானா துவான் கமாருஸமான் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. பிணையில் விடுவிக்க முடியாத குற்றம் சாட்டப்பட்டவர்கள், 16 வயதுக்குக் கீழ்ப்பட்டவராக இருந்தால், அவர்களுக்கு பிணை கிடைக்கக்கூடிய கிரிமினல் நடைமுறைச் சட்டம், 388-ஆவது பிரிவின்படி குற்றம் சாட்டப்பட்டப் பெண்ணுக்கு பிணைக்கு வழங்கும்படி விண்ணப்பம் செய்தும் அது நிராகரிக்கப்பட்டது என்று சிறுமியின் வழக்கறிஞர் Nurainie Haziqah Shafii தெரிவித்தார்.
