31.5 C
Kuala Lumpur
Tuesday, June 23, 2026

Vetri

ஜோகூர் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்: -தேசிய முன்னணியில் அதிகாரப் போட்டி இல்லையாம் -உதவித் தலைவர் காலிட் நோர்டின்

🔥 Views : 9
👁 Reading Now : 37

ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் தேசிய முன்னணியில் நிலவும் வழக்கத்துக்கு மாறான தாமதத்திற்கு, அந்தக் கூட்டணியில், குறிப்பாக அம்னோவில் நிலவும் அதிகாரப் போட்டிதான் காரணம் என்று தேசிய அரசியல் வட்டத்தில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் இதை மறுத்துள்ளார்; தேசிய உறுப்புக் கட்சிகளான மசிச, மஇகா உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு இன்னமும் தொடர்வதுதான் இந்தத் தாமதத்திற்குக் காரணம். எது எவ்வாறாயினும் பிப்ரவரி 23, புதங்கிழமை 56 தொகுதிகளுக்குமான தேசிய முன்னணியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்று பாசிர் கூடாங்கில் நோர்டின் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles