
சிலாங்கூர் செர்டாங் நகராண்மைக் கழக விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கராத்தேப் போட்டியில் லாபுவான் அணி பதக்கங்களைக் குவித்தது. 30-ஆவது தேசிய இளையோர் கராத்தேப் போட்டியும் 40-ஆவது தேசிய கராத்தேப் போட்டியும் ஒருசேர நடைபெற்ற வேலையில், லாபுவான் கூட்டரசுப் பிரதேச அணி தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைக் குவித்துள்ளது.
பிப்ரவரி 17-ஆம் நாள் முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்த கராத்தேப் போட்டியில் தேசிய அளவில் 700 வீரர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2011-ஆம் ஆண்டுக்குப் பின் லாபுவான் கைப்பற்றும் முதல் தங்கம் இது.
