25.1 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

இரண்டாம் காலாண்டில் நாட்டின் எல்லை திறக்கப்படலாம்

🔥 Views : 22
👁 Reading Now : 50

நாட்டின் எல்லையைத் திறப்பதற்கு இவ்வாண்டு இரண்டாம் காலாண்டின் தொடக்கம் சிறந்த தருணமாக அமையுமென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியுள்ளார்.

எல்லைத் திறப்பு குறித்த வழிகாட்டியைத் தயார் செய்ய சுகாதார அமைச்சுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இரு வார கால அவகாசம் வழங்கியுள்ளார். அதனால் நாட்டின் எல்லை இரு வாரங்களில் திறக்கப்படுமென அர்த்தமாகாது. அத்தகைய முடிவை சுகாதார அமைச்சு தனியாக எடுக்க முடியாது.

முதலில், கோவிட் தொற்று விவகாரத்துடன் தொடர்புடைய அமைச்சுகள் அடங்கிய செயற்குழுவிடமும் பரிந்துரையை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னரே, அமைச்சரவையின் பரிசீலனைக்கு முன் வைக்கப்பட்டு, அங்கு எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் எல்லை திறப்பு குறித்த தேதியை பிரதமர் முடிவு செய்வார் என கைரி விளக்கம் அளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles