28.5 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

நாட்டில் அரசியல் சலசலப்பின் ஊற்றுக் கண் மகாதீர்

🔥 Views : 8
👁 Reading Now : 39

துன் மகாதீர், தேசிய இருதயக் கழகம்-IJNஇல் அனுமதிக்கப்பட்டு பின் அங்கிருந்த வெளியேறிய அண்மைக் காலத்தில் தேசிய அரசியல் சலசலப்பின்றி காணப்பட்டது.

தற்பொழுது சற்று உடல் நலம் தேறிய நிலையில் மீண்டும் சண்டைக் கோழி வேலையைத் தொடங்கியுள்ள மகாதீர், டத்தோஸ்ரீ நஜீப்புடன் மல்லுக்கு நிற்கிறார்.

ஜோகூர் மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில், நாட்டின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் ஹுசேனையும் அவரின் மகனும் 6-ஆவது பிரதமருமான நஜீப்பையும் ஒப்பிட்டு, நஜீப் ஒன்றுமில்லை என்றும் நாட்டின் பல கோடி சொத்துக்களை சூறையாடியுள்ளார் என்றும் சொல்லிவிட்டு நஜீப்புடன் தனிப்பட்ட பகை ஒன்றுமில்லை என்று சப்பைக்கட்டு செய்வதும் கடைந்தெடுத்த பித்தலாட்டம்.

டான்ஸ்ரீ முகைதீன் யாசினைத் தூண்டிவிட்டு, துன் படாவியை பதவி இறங்கச் செய்ததும் அந்த இடத்திற்கு நஜீப்பைக் கொண்டு வந்ததும் இதே மகாதீர்தான். இவரால் குறைசொல்லப்படாத தலைவர் நாட்டில் ஒருவர்கூட இல்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles