25.1 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

சிலாங்கூர் அரசின் வெள்ள உதவி நிதி: -72,451 குடும்பத்தினர் பெற்றனர்

🔥 Views : 29
👁 Reading Now : 33

சிலாங்கூரில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித் தொகை இதுவரை 72,451 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் வெ.72.58 மில்லியன் நிதி செலவிடப்பட்டுள்ளது என்று மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி அறிவித்துள்ளார். சிலாங்கூர் வெள்ளை உதவித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட வெ.100 மில்லியன் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிலாங்கூர் அரசாங்கத்தின் உதவித் தொகையாக வெ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. வெள்ளத்தின்போது கிள்ளானில் குடும்ப உறுப்பினர்களை இழந்த ஆறு குடும்பத்தினர் உட்பட 23,450 குடும்பத்தினர் 23.51 மில்லியன் வெள்ளியை உதவி நிதியாகப் பெற்றுள்ளனர். கிள்ளானை அடுத்து பெட்டாலிங் மாவட்டத்தில் 17,917 குடும்பத்தினர் உதவி நிதியைப் பெற்றுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles