25.1 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

ஒமிக்ரோன் பரவல்: பெருவணிக வளாகங்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கை 40 % சரிவு

🔥 Views : 27
👁 Reading Now : 41

கோவிட்-19இன் புதிய திரிபான ஒமிக்ரோன் பரவல் நாட்டில் ஏற்படத் தொடங்கியதிலிருந்து, இப்போது அது அலையாக உருவடுத்துள்ளது. இதனால், கடந்த ஒரு வாரமாக, நாடு முழுவதும் உள்ள பெருவணிக வளாகங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதைக் காண முடிகிறது. ஏறக்குறைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 40 விழுக்காடு வரை குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக நாட்டில் கோவிட் தொற்று இரு மடங்கு அதிகமாக பதிவாகியது. இதனால் மக்கள் அச்சம் கொண்டு, கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்வது குறைந்திருப்பதாகவும் மைடின் பேரங்காடிகளிலும் அந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவன நிர்வாக இயக்குநர் டத்தோ அமீர் அலி மைடின் கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles